என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரி வீடு கொள்ளை"
மதுரை:
மதுரை கீரைத்துறை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம், குமரன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு (வயது 74). இவர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விறகுகடை நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு தங்கவேலு வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை சாத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்றார். தங்கவேலுவின் குடும்பத்தினர் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 500 பவுன் நகை, ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இதற்கிடையே நடைபயிற்சி முடிந்து 6 மணிக்கு வீட்டுக்கு வந்த தங்கவேலுவின் மனைவி கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் நகை, பணமும் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய்களும் வர வழைக்கப்பட்டன.
காலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தைரியமாக நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எஸ்.ஆலங்குளம் அழகுமலையான் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது43). மாட்டுத்தாவணி காய்கறி கமிஷன் மண்டியில் வியாபாரியாக உள்ளார்.
இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்